மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய பூசாரியை காப்பாற்றிய பொதுமக்கள்

மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய பூசாரியை காப்பாற்றிய பொதுமக்கள்
X

மின்சாரம் பாய்ந்து மயங்கிய பூசாரிக்கு முதல் உதவி செய்யும் பகுதி மக்கள்..

கோவிலுக்கு பூஜை செய்ய போது கேட்டை திறக்க முற்பட்ட பூசாரி மீது மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய பொதுமக்கள் அவரை காப்பாற்றினர்.

கோவிலில் பூஜை செய்து வந்த பூசாரி கேட் திறக்கும்போது மின்சாரம் பாய்ந்து மயங்கியதால் அப்பகுதி மக்கள் காப்பாற்றிய வீடியோ வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, புழல் வள்ளுவர் நகரில் குபேர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்றிரவு பூசாரி வழக்கம் போல பூஜைகளை செய்ய தனது இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு வந்தார். நேற்று முன்தினம் புழல் சுற்றுவட்டார இடங்களில் 18செமீ கனமழை கொட்டியது. கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த பூசாரி அதை நிறுத்திவிட்டு வாகனத்தில் இருந்து இறங்கி தேங்கி நின்ற தண்ணீரில் நடந்து வந்து பூஜை செய்வதற்காக கோவிலை திறக்க முற்பட்டார்.

பூசாரி கேட்டை தொட்டதும் அவர் மீது மின்சாரம் பாய்ந்து மயங்கினார்.அதனை கண்ட அப்பகுதி பெண் ஒருவர் கூச்சலிட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கட்டையை எடுத்து பூசாரியை கேட்டில் இருந்து தட்டி விட்டு அவரை வெளியே கொண்டு வந்தனர்.

தொடர்ந்து அவருக்கு சிபிஆர் செய்து வாயில் வாய் வைத்து மூச்சு காற்றை கொடுத்து காப்பாற்றினர். தொடர்ந்து பூசாரி மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பினார். மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய பூசாரியை சமயோஜிதமாக பொதுமக்கள் மீட்ட இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
how to bring ai in agriculture