கங்கைகொண்டசோழபுரம் கோவிலில் பக்தர்கள் பால்காவடி எடுத்து நேர்த்திக்கடன்

கங்கைகொண்டசோழபுரம் கோவிலில் பக்தர்கள் பால்காவடி எடுத்து நேர்த்திக்கடன்
பிரசித்திபெற்ற கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பால்குடம், பால்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

பிரசித்திபெற்ற கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத கடவெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் பால்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உலக பிரசித்தி பெற்ற மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி கடவெள்ளி மற்றும் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுப்பது வழக்கம். அதன்படி நடைபெற்ற இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் மற்றும் அலகு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக மாரியம்மன் கோவிலில் தொடங்கிய பால்குடம் ஊர்வலமானது முக்கிய வீதிகளில் வலம் வந்து இறுதியில் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலை சென்றடைந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story