விருதுநகர் புத்தக கண்காட்சி: பேரூராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு..!
விருதுநகர் புத்தக கண்காட்சியில் பங்கேற்ற பேரூராட்சி நிர்வாகிகளுக்கு, ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்
விருதுநகர் புத்தக கண்காட்சியில பங்கேற்ற பேரூராட்சி நிர்வாகிகளுக்கு, ஆட்சியர் வாழ்த்து:
விருதுநகர் மாவட்டத்தில் ,2வது புத்தக கண்காட்சி நடை பெற்று வருகிறது. கடந்த 16 ந் தேதி தொடங்கி 27ந் தேதி வரை நடைபெற்றது.
இந்த புத்தக கண்காட்சிக்கு, மாவட்ட ஆட்சியரின் அழைப்பின் பேரில், காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் செந்தில், மல்லாங்கிணறு பேரூராட்சித் தலைவர் துளசிதாஸ், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் எஸ். சேதுராமன், செயல் அலுவலர் அன்பழகன் பொறியாளர். கணேசன், வார்டு கவுன்சிலர்கள் வந்திருந்தனர்.
அவர்கள் மக்களுடன் சேர்ந்து புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர். சிலர் புத்தகங்களை வாங்கிச் சென்றனர். புத்தக கண்காட்சியில், பங்கேற்ற உள்ளாட்சி பிரதிநிதி களுக்கு ஆட்சியர் ஜெய சீலன் வாழ்த்து தெரிவித்தார். இது பொதுமக்களுக்கு உந்துதலாக அமையும் எனவும் பாராட்டினார்.