காரியாபட்டி அருகே அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்...!

காரியாபட்டி அருகே, மந்திரி ஓடை ஸ்ரீ வாழவந்த அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-06-17 08:32 GMT

வாழவந்தான் ஆலய மகா கும்பாபிஷேகம்.

காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே,மந்திரி ஓடை ஸ்ரீ வாழவந்த அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது .

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே, மந்திரி ஓடை கிராமத்தில் மிகவும் பழமையான ஸ்ரீ வாழவந்த அம்மன் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ விநாயகர் கோயில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டது. 16ஆம் தேதி காலை ,மங்கள இசையுடன் விக்னேஷ்வர பூஜை, , மகாசங்கல்பம், புண்யாஹவசனம், கும்பபூஜை கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், முதல் கால பூஜைகள் தொடங்கப் பட்டது.


இரவு ,மகா சங்கல்பம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், அங்குராப்பணம், ரஹ் சாபந்தனம், யந்திர ஸ்தாபனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடை பெற்றது. இன்று காலை மணியளவில் புனித நீர் குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டு, வாழ வந்தம்ன் கோபுர கலசங் களுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.

அதன் பிறகு , அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப் பட்டது. விழாவில், பக்தர்க ளுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று புனிதநீர் தரிசனம் பெற்றுக்கொண்டனர். 

Tags:    

Similar News