மகா சங்கடகர சதுர்த்தி விழா: பக்தர்கள் பரவசம்..!

காரியாபட்டி கல்குறிச்சி சக்தி விநாயகர் கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி பெருவிழா 10 நாட்கள் நடை பெற்றது.

Update: 2024-08-23 10:42 GMT

மஹா சங்கடஹரி சதுர்த்தி விழா 

காரியாபட்டி கல்குறிச்சி சக்தி விநாயகர் திருக்கோயில் மகா சங்கடஹர சதுர்த்தி பெருவிழா - 10 நாட்கள் நடை பெற்றது.

காரியாபட்டி ஆகஸ்ட் 23 .

காரியாபட்டி அருகே, கல்குறிச்சியில் சக்தி விநாயகர் கோவில் திருவிழா 10 நாட்கள் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கல்குறிச்சி ஓம் சக்தி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் சார்பாக மகா சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது . கடந்த 14ஆம் தேதி தொடங்கப்பட்ட விழா தொடர்ந்து 10 நாள் நடைபெற்றது .

9 நாட்கள் விநாயகர் பெருமானுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது .இரவில் சுவாமி வீதி உலா வந்து பத்தர்களுக்கு காட்சி தரும் வைபவம் நடைபெற்றது . சக்தி விநாயகர் விநாயகருக்கு தினமும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அத்தோடு, மாலை விநாயகர் உற்சவமூர்த்தி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மஹா சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது. அன்றைய தினம் விநாயகருக்கு 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது பக்தர்கள் அனை வருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது.. 10 நாட்கள் நடைபெற்ற மஹா சங்கட சதுர்த்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். 

Tags:    

Similar News