விருதுநகர் அருகே முன்னாள் அமைச்சர் தங்கப் பாண்டியன் நினைவு நாள்
விருதுநகர் அருகே மல்லாங்கிணறில் முன்னாள் அமைச்சர் தங்கப் பாண்டியன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.;
விருதுநகர் மாவட்டம் மல்லாங் கிணறில் முன்னாள் திமுக அமைச்சர் தங்கபாண்டியனின் 27- வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
திமுக வின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான தங்கப்பாண்டியனின் 27-ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுகவினர் பெருந்திரளாக அஞ்சலி செலுத்தினார்கள்.
தங்கப் பாண்டியன் நினைவிடம் மல்லாங்கிணறில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஜூலை 31ந்தேதி அவரது நினைவிடத்தில் நினைவு நாள் அனுசரிக்கப் பட்டு வருகிறது. அதன்படி, நேற்று காலையில் வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தங்கப்பாண் டியன நினைவிடத்தில், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து, எம்.பிக்கள் தமிழச்சி தங்கப் பாண்டியன், நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி தங்கப் பாண்டியன், சீனிவாசன், காதர் பாட்சா (எ) முத்துராமலிங் கம் , சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் உட்பட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.