சிவகாசி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் நேரு ஆய்வு

சிவகாசி மாநகராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்;

Update: 2023-10-10 08:45 GMT

சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் நேரு .

சிவகாசி மாநகராட்சியின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்றார்  அமைச்சர் கே.என்.நேரு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் சங்கரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, தொழில் நகரான சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் நலத் திட்டங்கள் அவர்களை நேரிடையாக சென்றடையும் வகையில் நிர்வாக கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிவகாசி - சாத்தூர் சாலையில், சுமார் 10 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மாநகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் விரைவுபடுத்தப் பட்டுள்ளது. மாநகராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள், சாலை வசதி, சுற்றுச்சாலை திட்டம், குடிநீர் வசதி உட்பட அனைத்து தேவைகளும், அனைத்து திட்டங்களும் விரைந்து நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News