சிவகாசி அருகே பட்டாசு பதுக்கி வைத்திருந்த இருவர் கைது
பட்டாசு கடைக்கு அருகில் தகர செட் அமைத்து பட்டாசு பெட்டிகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது;
சிவகாசி அருகே பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதிகளில் சட்ட விரோதமாக, பட்டாசுகள் பெட்டி, பெட்டியாக பதுக்கி வைக்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் சிவகாசி - சாத்தூர் சாலை பகுதியில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.
சிவகாமிபுரம் பகுதியில் திரவியராஜ் (37) என்பவர், தனக்கு சொந்தமான பட்டாசு கடைக்கு அருகில் தகர செட் அமைத்து பட்டாசு பெட்டிகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் முத்தமிழ்புரம் காலனியைச் சேர்ந்த அருணாச்சலம் (32) என்பவர், அதே பகுதியில் உள்ள பட்டாசு கடைக்கு அருகே கூரை செட் அமைத்து பட்டாசுகளை பெட்டி, பெட்டியாக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. சட்ட விரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த திரவியராஜ் மற்றும் அருணாச்சலம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரும் பதுக்கி வைத்திருந்த 20 பெட்டி பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.