சிவகாசியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்திய 2 பேர் கைது

அரசு தடை விதித்துள்ள புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Update: 2023-05-18 07:45 GMT

சிவகாசியில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை  பொருள்கள் 

சிவகாசி பலசரக்கு மொத்த விற்பனை கடையில்  ரகசியமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக காரில் கடத்திய வந்த  2 பேர் கைது. கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, மாத்தி தெரு பகுதியைச் சேர்ந்தவர் அருண் (45).இவர் வடக்கு ரதவீதியில், வேல்முருகன் ஸ்டோர் என்ற பெயரில் பலசரக்குகள் மொத்த விற்பனை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடையில், அரசு தடை விதித்துள்ள புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியிலிருந்து, அருணின் கடைக்கு ஒரு காரில் சரக்குகள் கொண்டு வரப்பட்டது. சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் அந்தக் காரை சோதனை செய்தனர். அந்தக்காரில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மூடை, மூடையாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.



சுமார் 1 லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்களை கடத்தி வந்த கார் ஓட்டுநர், அயன்பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் (33) மற்றும் கடை உரிமையாளர் அருண் ஆகிய இருவரையும் சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.

மேலும் புகையிலைப் பொருட்களை கொண்டு வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News