சிவகாசி அருகே காசநோய் விழிப்புணர்வு முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் காச நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது;
சிவகாசி அருகே நடைபெற்ற காச நோய் விழிப்புணர்வு முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் காச நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மத்தியசேனை பகுதியில் உள்ள, பட்டாசு மூலப்பொருள் தயாரிக்கும் அரசன் அலுமினியம் நிறுவனத்தில் டெங்கு மற்றும் காச நோய் தடுப்பு விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.மாவட்ட காச நோய் நல அலுவலர் சந்திரசேகர் தலைமையில், காச நோய் தடுப்பு ஒருங்கிணைப்பாளர்கள் டேனியல், வீரபாண்டி உள்ளிட்டவர்கள் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் காச நோய் அறிகுறிகள் குறித்து, தொழிலாளர்களுக்கு விளக்கமளித்தனர்.
மேலும், ஆலைத்தொழிலாளர்கள் 60 பேருக்கு, காச நோய் பரிசோதனை ஔிப்படம் எடுக்கப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயசந்திரன் பேசும்போது, தற்போது விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் சற்று இருந்துவரும் நிலை உள்ளது. எனவே ,இது வரை தொற்று தடுப்பூசி செலுத்தாதவர்கள் அவசியம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு தகுதியுள்ள அனைவரும் கண்டிப்பாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும். லேசான காய்ச்சல் அறிகுறி இருந்தாலே, உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.