பக்தர்களுக்கு அருள்பாலித்த திருவில்லிபுத்தூர் ஆண்டாள்- ரெங்கமன்னார்

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகள், 'கோபால விலாசம்' மண்டபத்தில் எழுந்தருளினர்

Update: 2022-12-30 16:00 GMT

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகள், 'கோபால விலாசம்' மண்டபத்தில் எழுந்தருளினர்

 ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில், 108 திவ்யதேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான வைணவக் கோவிலாகும். பழமையான இந்த கோவிலில்தான் பெரியாழ்வார் மற்றும் சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று போற்றப்படும் ஆண்டாள் ஆகியோர் அவதரித்தனர். இங்கு அருள் பாலிக்கிறார் ரங்கநாதர்.

திருப்பதியில் உள்ள பெருமாளுக்கு புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையன்று, ஆண்டாள் சூடிய மாலையை எடுத்து சென்று பெருமாளுக்கு அணிவிக்கின்றனர். அதேபோல் ஆண்டாளின் திருக்கல்யாணத்திற்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் இருந்து பட்டுப்புடவை அனுப்பப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் வடபத்ரசாயி பெருமாள் கோவில் உள்ளது. இவருக்குத்தான் ஆண்டாள் தன் மாலையை சூடி கொடுத்தாள் என்று சொல்லப்படுகிறது. இங்கு அமைந்துள்ள கோபுரம் 196 அடி உயரமும் 11 அடுக்குகளுடனும் அழகாக காட்சியளிக்கிறது.

இக்கோவிலில் மார்கழி உற்சவம் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. மார்கழி உற்சவத்தின் சிறப்பு அம்சமான பகல்பத்து திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் ஸ்ரீ ஆண்டாள் - ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன.

பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் தினமும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர். மார்கழி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரியபெருமாள் சன்னதியில் உள்ள ' கோபால விலாசம்' மண்டபத்தில் ஸ்ரீ ஆண்டாள்-ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News