சிவகாசி சிவன் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்

திருவாசகத்தின் 51 பதிகங்களில் 10 பதிகங்கள் பெண்களுக்காகவே சிறப்பாக எழுதப்பட்டன.;

Update: 2023-04-22 12:00 GMT

சிவகாசி சிவன் கோயிலில்,  நடைபெற்ற 'திருவாசகம்' முற்றோதுதல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இன்று காலை, 'வான் கலந்த திருவாசகம்' முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர், ஆருத்ரா திருவாசக முற்றோதுதல் இயக்கம் அமைப்பின் சார்பாக சொற்பொழிவாளர் சிவபிரேமா, வான் கலந்த திருவாசகம் என்ற தலைப்பில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

திருவாசக முற்றோதல் செய்யும் அற்புதங்களில் இதுவும் ஒன்று. திருவாசகத்தின் 51 பதிகங்களில் 10 பதிகங்கள் பெண்களுக்காகவே சிறப்பாக எழுதப்பட்டன. திருவெம்பாவை, திருஅம்மானை, திருப்பொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம் திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோணோக்கம், திருப்பொன்னூசல் என்பவை அவை, அதன்படி, இன்று காலை ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமிக்கும், ஸ்ரீவிசாலாட்சி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து சுவாமி சன்னதி அருகே, இன்று காலை 8.30 மணியில் இருந்து, மாலை 4.30 மணி வரை வான் கலந்த திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் சிவ பக்தர்கள் சிறப்பாக செய்துள்ளனர்.

Tags:    

Similar News