சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றிவைத்த மேயர்
சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினத்தையொட்டி மேயர் தேசியக் கொடி ஏற்றினார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சிவகாசி, மாநகராட்சியாக உருவாக்கப்பட்ட பின்பு முதல் சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. மாநகராட்சியின் முதல் பெண் மேயரான சங்கீதா இன்பம் தலைமையில், மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திரதின கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
மாநகராட்சி அலுவலக வளாகத்தில், மேயர் சங்கீதா இன்பம் தேசியக்கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேயர் சங்கீதா இன்பம் பொதுமக்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.