சிவகாசியில் மாநில அளவிலான கேரம் போட்டிகள் மே 19 ல் தொடக்கம்
போட்டிகள் சிவகாசி - விருதுநகர் சாலையில் உள்ள ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் நடைபெறுகிறது.;
சிவகாசியில் வரும் 19ம் தேதி மாநில அளவிலான கேரம் போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், வரும் 19ம் தேதி (வெள்ளி கிழமை) மாநில அளவிலான இளையோர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் துவங்குகின்றன.
இது குறித்து மாவட்ட கேரம் கழகத் தலைவர் செல்வராஜன் தகவல் வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு கேரம் கழகம் ஆதரவோடு விருதுநகர் மாவட்ட கேரம் கழகம் மற்றும் சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனமும் இணைந்து, 64வது மாநில ஜுனியர் மற்றும் இளையோர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த உள்ளது.
போட்டிகள் சிவகாசி - விருதுநகர் சாலையில் உள்ள ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் நடைபெறுகிறது. வரும் 19ம் தேதி (வெள்ளி கிழமை) முதல், வரும் 21ம் தேதி (ஞாயிறு கிழமை) வரை போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வரும் 15ம் தேதிக்குள், 98421 42348 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.