ராஜபாளையம் அருகே தென் மாவட்ட அளவிலான யோகா, மல்லர் கம்பம் போட்டிகள்

ராஜபாளையம் அருகே தென் மாவட்ட அளவிலான யோகா, மல்லர் கம்பம் போட்டிகள் நடைபெற்றது.;

Update: 2023-02-13 10:45 GMT
மல்லர் கம்பத்தில்  ஏறி நின்று சாகசம் செய்த ஒரு மாணவர்.

ராஜபாளையத்தில், தென் மாவட்ட அளவிலான யோகா மற்றும் மல்லர் கம்பம் போட்டிகள் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே எஸ். திருவேங்கட புரத்தில் உள்ள தனியார் பள்ளியில், தென் மாவட்ட அளவிலான இந்த யோகா மற்றும் மல்லர் கம்பம் போட்டிகள் நடைபெற்றது.

இதய நிறைவு தியானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த போட்டிகளில் தென்காசி, விருதுநகர் மற்றும் நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து 32 பள்ளிகளை சேர்ந்த 1853 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


யோகா போட்டிகள் 1 முதல் 12 வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக 12 பிரிவுகளில் நடைபெற்றது.இதில், மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தித்திப்பு ஆசனம், குக்குராசனம், ஏகபாத சிரசாசனம், கந்தர் ஆசனம், கருடாசனம், மயிலாசனம், உபநிஷ்ட கோணாசனம், பாதாசனம் உள்ளிட்ட 38 கடினமான ஆசனங்களை நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் செய்து காட்டினர்.

மல்லர் கம்பம் போட்டிகளில் தென்காசி மாவட்டம் தேவிபட்டினத்தை சேர்ந்த மல்லர் கம்பம் மாணவர்கள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்கள், சுமார் 15 அடி உயர கம்பத்தில் ஏறி கூர்மாசனம், சக்டோசனம், மயூராசனம், பத்தமயூராசனம், பிரிக்கி, பஜ்ரங்க லெக் பேலன்ஸ், பேக் பெண்டு, ப்ரண்ட் பெண்டு, ப்ளாங்க் பேக், ப்ரெண்ட், டவர் பேர், கத்தா, பந்தர், ப்ரெண்ட் டைவ் கேட்ச் உள்ளிட்ட கடினமான ஆசனங்களை செய்து காட்டினர்.

இதில், வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் வீரர்களுக்கு தனி நபர் பரிசுகளும், குழு பரிசுகள் மற்றும் ஒட்டு மொத்த சேம்பியன் பரிசுகளும் வழங்கப்பட்டது. மேலும், கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News