சிவகாசி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல்: திமுக வெற்றி

சிவகாசி ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தலில் திமுக வென்றது. எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

Update: 2022-07-13 08:45 GMT

  இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சின்னதம்பி

சிவகாசி ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தின் 25வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலில், திமுக கட்சியைச் சேர்ந்த சின்னதம்பி 2 ஆயிரத்து, 680 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சின்னதம்பி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலர் உமாசங்கர் வழங்கினார். இந்த இடைத்தேர்தலில் திமுக கட்சியை எதிர்த்து போட்டியிட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் உட்பட அனைவரும் டெபாசிட் இழந்தனர். வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சின்னதம்பிக்கு, திமுக கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் பள்ளபட்டி ஊராட்சி 10வது வார்டு உறுப்பினர் சக்திவேல், ஆலமரத்துப்பட்டி ஊராட்சி 6வது வார்டு உறுப்பினர் தங்கராஜ் இருவரும் போட்டியின்றி தேர்வு பெற்றனர்.


Tags:    

Similar News