சிவகாசி சிவன் கோவில் வைகாசி பிரமோற்சவ விழா: நாளை தேரோட்டம்

சிவகாசி சிவன் கோவிலில் நாளை வைகாசி பிரமோற்சவ தேரோட்டம் நடைபெறவுள்ளது.

Update: 2022-06-06 08:15 GMT

சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மன்

சிவகாசி சிவன் கோவிலில்  நாளை   வைகாசி பிரமோற்சவ தேரோட்டம் நடைபெறவுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பிரசித்திபெற்ற ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மன் வீற்றிருக்கும் சிவன் கோவிலில் வைகாசி பிரமோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், சிறப்பு அலங்காரங்கள், அர்ச்சனைகள் நடைபெற்று வருகிறது. இன்று காலை ஸ்ரீநடராஜர் - ஸ்ரீசிவகாமி தாயாருடன் எழுந்தருளி ரதவீதிகளில் ஊர்வலம் வந்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிரமோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், மண்டகப்படி உபயதாரர்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News