சிவகாசி மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
சிவகாசி மாநகராட்சியில் ரூ. 3.80 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன;
சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விருதுநகர் - திருத்தங்கல் சாலையில் சுமார் 3 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் செயல்பட்டு வரும் நுண்உர செயலாக்க மையத்தையும், ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு பணி திட்டத்தின் மூலம் சுமார் 40 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில், 3 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகளையும், தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தின் மூலம், சிவகாசி மாநகராட்சி பேருந்து நிலையத்தில், சுமார் 37 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பொது சுகாதார வளாகம் உள்ளிட்ட பணிகளை, ஆட்சியர் ஜெயசீலன் நேரில் பார்வையி்ட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, சிவகாசி மாநகராட்சி ஆணையர் சங்கரன், பொறியாளர் சாகுல்ஹமீது, வட்டாட்சியர் லோகநாதன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.