ஆணைக்குட்டம் ஷட்டர்களை சீரமைக்க கோரிக்கை
விருதுநகர் பகுதிக்கு, குடிநீர் வழங்குவதற்காக கடந்த 1989 ம் ஆண்டு ஆனைக்குட்டம் நீர்த் தேக்கம் திறக்கப்பட்டது;
குடிநீர் ஆதாரமாக இருக்கும், ஆனைக்குட்டம் அணையின் ஷட்டர்களை உடனடியாக சரி செய்ய கோரிக்கை
குடிநீர் ஆதாரமாக இருக்கும், ஆனைக்குட்டம் அணையின் ஷட்டர்களை உடனடியாக சரி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் பகுதிக்கு, குடிநீர் வழங்குவதற்காக கடந்த 1989ம் ஆண்டு ஆனைக்குட்டம் நீர்த் தேக்கம். திறக்கப்பட்டது இந்த அணை கட்டப்பட்ட நாளிலிருந்து ஷட்டர்களில் நீர்க்கசிவு இருந்து வருகிறது. இதனால், அணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலையே உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அணையின் ஷட்டர்களை, பல லட்சம் ரூபாய் செலவு செய்து பழுது பார்க்கப்பட்டாலும், மீண்டும் மீண்டும் ஷட்டர்களில் நீர்க்கசிவு ஏற்பட்டு அணையிலிருந்து தண்ணீர் முழுவதுமாக வெளியேறி வீணாகின்றது. விரைவில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. அதற்குள் அணையின் ஷட்டர்களை சரி செய்யும் பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாகவும், இந்தப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.