காரியாபட்டியில் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊக்குவித்தல் முகாம்

காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்காண ஊக்குவித்தல் முகாம் நடைபெற்றது

Update: 2023-11-29 10:15 GMT

காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற  மாணவர்களுக்கான ஊக்குவித்தல் முகாம்.

காரியாபட்டியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊக்கு வித்தல் பயிற்சி முகாம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி சார்பாக,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு முழு மதிப்பெண்கள் பெறுவது பற்றிய ஊக்குவித்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது.

கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் எஸ். முகமது ஜலில் தலைமை வகித்தார். முதன்மை நிர்வாக அதிகாரிகள் எஸ் .எம். சீனி முஹைதீன் , எஸ் .எம் .சீனி முகமது அலியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நிர்வாக இயக்குனர்கள் எஸ். எம். நிலாபர் பாத்திமா, எஸ்.எம். நாசியா பாத்திமா ஆகியோர்  ஏற்பாட்டில்  இந்த முகாம் நடத்தப்பட்டது.

நிகழ்வில், கல்லூரி முதல்வர் சிவக்குமார் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முன்னாள் முதல்வரும் கல்வி ஆலோசகருமான டாக்டர். செந்தில்குமார், கல்லூரி நிர்வாக இயக்குனர்கள் நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முகாமில் , கணிதத்திற்கு மூத்த ஆசிரியர் டோமினிக் இயற்பியல் பாடத்திற்கு ஆசிரியர் ஞானகுரு, வேதியல் பாடத்திற்கு ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெறுவது எப்படி குறித்து பயிற்சி அளித்தனர் .

ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் லட்சுமணராஜ், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் மீனாட்சி சுந்தரம், இயந்திரவியல் துறை தலைவர் அருண் பாலா, பேராசிரியர்கள் வெங்கடேஷ், நாகராஜ், இயற்பியல் துறை பேராசிரியர்கள் ரமேஷ்கண்ணன், கார்த்திக்குமார், வேதியல் துறை தலைவி ஜெயலட்சுமி, பேராசிரியர் ஷேக் மைதீன் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். .

Tags:    

Similar News