சிவகாசியில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்

சிவகாசி அருகே, உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்

Update: 2022-08-25 12:18 GMT

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பாறைப்பட்டி பகுதியில் ஏராளமான பட்டாசு விற்பனை கடைகள் உள்ளன. பட்டாசு கடைகள் தவிர்த்து, அனுமதியில்லாமல் வீடுகள், குடோன்களை வாடகைக்கு பிடித்து சட்ட விரோதமாக பட்டாசுகளை பெட்டி, பெட்டியாக இருப்பு வைத்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் பாறைப்பட்டி பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சாமிபுரம் காலனி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (58). என்பவர், ஒரு குடோனில் உரிய அனுமதி எதுவும் பெறாமல் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 பெட்டி பட்டாசுகள் பதுக்கி வைந்திருந்தது தெரிய வந்தது.

பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், லட்சுமணன் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News