சிவகாசியில் ரமலான் நோன்பு புத்தாடை வழங்கல்
இந்திய தேசிய லீக் கட்சி மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர், புத்தாடைகள் வழங்கினார்.;
சிவகாசியில் புனித ரமலான் திருநாளை முன்னிட்டு தேசிய லீக் கட்சியினர் இலவச புத்தாடை வழங்கினர்.
ருதுநகர் மாவட்டம், இந்திய தேசிய கட்சி சார்பாக, சிவகாசியில் ரமலான் பெருநாளை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி சிவகாசி ராயல் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்திய தேசிய கட்சியின் சட்ட ஆலோசகர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். நகர் தலைவர் முகமதுகான், செயலாளர் முத்து விலாசா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய தேசிய லீக் கட்சி மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர், புத்தாடைகள் வழங்கினார். நிகழ்ச்சியில், மாநகர்மன்ற உறுப்பினர்கள் வேல்ராஜ், ரேணுகா நித்திலா லீக் கட்சி பொருளாளர் முத்து விலாசா, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் கராத்தே அக்பர், அரபிக்கல்லூரி முன்னாள் முதல்வர் முகமது சிந்தா ஷா, அப்துல் சத்தார், காங்கிரஸ் கட்சி ஜப்பார், இந்திய முஸ்லீம் லீக் அப்துல் சத்தார் ஆகியோர் பங்கேற்றனர்.
ரமலான் பண்டிகை சிறப்புகள்..ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன” என்பதன் கருத்து, நாம் நரகிருந்து தப்பித்து இலகுவாக சொர்க்கம் செல்வதற்கான வாய்ப்புகளை இறைவன் ரமலான் மாதத்தில் வைத்துள்ளான். மனிதன் தான் செய்யும் பாவங்களால்தான் நரகத்திற்குச் செல்கிறான். இறைத் தூதர்(ஸல்) அவர்கள் மூலம் நமக்கு இறைவன் கற்றுக்கொடுத்த சிறு வணக்கங்களை இம்மாதத்தில் செய்தால் அவற்றின் மூலம் நம் பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிக்கிறான். இந்த சிறு வணக்கங்களுக்கு பன்மடங்கு நன்மைகளையும் ஈடுஇணையில்லாத சுவனத்து பாக்கியங்களையும் அல்லாஹ் வழங்குகிறான்.
ஆதமுடைய மக்களை வழிகெடுத்து பாவங்களை செய்ய வைத்து அவர்களை நரகவாசிகளாக ஆக்க வேண்டும் என்பதே சைத்தான்களின் ஒரே குறிக்கோள். ரமலான் மாதத்தில் அடியார்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுவதால் சைத்தான்களின் இந்த முயற்சி பலனற்று தோல்வியில் முடிகின்றது. இதுவே சைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள் என்பதின் விளக்கமாகும்