கோரிக்கையை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ரத்த கையெழுத்து இயக்கம்
காரியாபட்டியில் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தினர்
காரியாபட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சார்பில் ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டார சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக, சங்க சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
சங்க துணைத் தலைவர் அன்னலட்சுமி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தாலுகா செயலாளர் சீராளன் ,ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட
இணைச் செயலாளர் பெரியசாமி முன்னிலை வகித்தார். பணி முடித்த சத்துணவு ஊழியர்களை, அனைத்து துறை காலிப்பணியிடங்களில் நிரப்பி, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க கோரியும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டே நடத்த வேண்டு என்றும், ஒய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு ஊதியம் ரூ.7650 வழங்க கோரி சத்துணவு ஊழியர்கள் ரத்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
சத்துணவுத் திட்டம் கடந்து வந்த பாதை..
பெருந்தலைவர் காமராஜல் முதலமைச்சராக இருந்த போது மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். அவரைத் தொடர்ந்து முதலமைச்சராக வந்த எம்ஜிஆர் தமிழகத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தை ஊரக பகுதிகளில் 01.07.1982 அன்றும் நகர்புறங்களில் 15.09.1982 அன்றும் நடைமுறைக்கு கொண்டு வந்தார்.
1. சத்துணவுத்திட்டத்தின் நோக்கம்...பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்திட வகைசெய்தல்.ஊட்டச்சத்து குறைபாடுள்ள பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவு வழங்குவதன் மூலம் கல்வித்தரத்தை மேம்படுத்துதல்.பள்ளி பயிலும் மாணவ, மாணவியர் கல்வி இடைநிறுத்தம் செய்வதை தடுத்திடுதல்.2.சத்துணவுத்திட்டம் துவங்கப்பட்ட முதல் நாளது வரை செயல்படுத்திய துறைகள்.
பள்ளிக் கல்வித்துறை 1982 முதல் மே 1990 வரை.ஊரக வளர்ச்சித்துறை சூன் 1990 முதல் செப்டம்பர் 1992 வரை.சமூக நலத்துறை அக்டோபர் 1992 முதல் செப்டம்பர் 1997.ஊரக வளர்ச்சித்துறை அக்டோபர் 1997 முதல் 19 சூலை 2006 வரை.சமூக நலத்துறை 20 சூலை 2006 முதல் நாளது வரை (ஊரகம்),23 ஆகஸ்டு 2007 முதல் நாளது வரை (நகர்புறம்)சத்துணவுத்திட்டமானது தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகள், உள்ளாட்சி பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலம், சிறுபான்மையினர் மற்றும் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கான நிதி மாநில மற்றும் மத்திய அரசுகளால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.