சிவகாசி அரசு மருத்துவமனையில் புதிய ஆய்வகம்: காணொலியில் முதல்வர் தொடக்கம்
சிவகாசி அரசு மருத்துவமனையில் 1.35 கோடி மதிப்பிலான புதிய ஆய்வகத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக தொடக்கம்;
சிவகாசி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி ஆய்வகத்தை துவக்கி வைத்தனர்.
சிவகாசி அரசு மருத்துவமனையில் 1 கோடியே, 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய ஆய்வகத்தைமுதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக, கொரோனா தொற்றை கண்டறியும் ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வகம் புதிதாக நிறுவப்பட்டது. சுமார் 1 கோடியே, 35 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த ஆய்வகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி ஆய்வகத்தை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் வனராஜா, எம்எல்ஏ-அசோகன், துணை மேயர் விக்னேஷ்பிரியா, சிவகாசி ஒன்றிய பெருந்தலைவர் முத்துலட்சுமி விவேகன்ராஜ், சிவகாசி மாநகராட்சி மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.