சிவகாசி காய்ச்சல்காரன் அம்மன் கோவிலில் நவராத்ரி விழா தொடக்கம்
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்;
அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் காட்சியளிக்கும் ஸ்ரீமுப்பிடாரி அம்மன்
சிவகாசி காய்ச்சல்கார அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறைக்கு சொந்தமான காய்ச்சல்கார அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கோலகலாமாகத் தொடங்கியது. நேற்று கோவிலின் மூலவர் ஸ்ரீமுப்பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவிலில் நவராத்திரி சிறப்பு கொலு நடைபெற்று வருகிறது.
நேற்று இரவு நவராத்திரி கொலுவில், ஸ்ரீமுப்பிடாரி அம்மன் மகேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளினார். மேலும் சிறப்பு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.