மும்பை- தூத்துக்குடி வாராந்திர சிறப்பு ரயிலுக்கு விருதுநகரில் பொதுமக்கள் வரவேற்பு
மும்பை-தூத்துக்குடி வாராந்திர சிறப்பு ரயில்
விருதுநகர் வழியாக இயக்கப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரயிலுக்கு, ரயில் பயணிகள் பொதுமக்கள் வரவேற்பளித்தனர்.
மும்பை - தூத்துக்குடி - மும்பை வாராந்திர சிறப்பு விரைவு ரயில் சேவையை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. வண்டி எண் 00143 சிறப்பு விரைவு ரயில் ஜுலை மாதம் 7ம் தேதி முதல், ஜுலை மாதம் 23ம் தேதி வரை இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
நேற்று மதியம் மும்பையிலிருந்து புறப்பட்டுள்ள இந்த வாராந்திர சிறப்பு விரைவு ரயில், இன்று இரவு விருதுநகர் வந்து சேரும். பின்னர் விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக தூத்துக்குடிக்கு சென்றடையும். தூத்துக்குடியில் இருந்து வண்டி எண் 00144, 9ம் தேதி (ஞாயிறு கிழமை) அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, திங்கள் கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு மும்பைக்கு சென்றடையும்.
இந்த வாராந்திர சிறப்பு விரைவு ரயில் தமிழகத்தில் திருத்தணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக தூத்துக்குடிக்கு செல்லும். இதே மார்க்கத்தில் தூத்துக்குடியிலிருந்து, மும்பைக்கு செல்லும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த வாராந்திர சிறப்பு விரைவு ரயில் அறிவிப்பிற்கு, விருதுநகர் பகுதி ரயில் பயணிகள் மிகுந்த வரவேற்பு கொடுத்தனர். மேலும் இந்த வாராந்திர சிறப்பு விரைவு ரயிலை, தொடர்ச்சியாக எல்லா வாரங்களிலும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.