காரியாபட்டி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல்

காரியாபட்டி ஒன்றியத்தில் 1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய கூடங்கள் அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார்.;

Update: 2023-12-18 09:00 GMT

காரியாபட்டி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் தங்கம் தென்னரசு.

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பாக, காரியாபட்டி ஒன்றியத்தில் அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில் (2023- -24) கெப்பிலிங்க பட்டி, ஆவியூர், கம்பாளி, பாஞ்சார். பல்லவரேந்தல்ஆகிய 5 ஊர்களில் தலா 25 லட்சம் வீதம் 1 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த புதிய கட்டிட பணிகளுக்கு நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி வைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில், இராமநாதபுரம் எம்.பி.நவாஸ் கனி, வருவாய் கோட்டாட்சியர் வள்ளி நாயகம், தாசில்தார் சுப்பிரமணியம், ஒன்றியக்குழு தலைவர், முத்துமாரி, துணைத் தலைவர் இராஜேந்திரன் , ஒன்றியச் செயலாளர்கள் கண்ணன், செல்லம், மாவட்டக் கவுன்சிலர் தங்க தமிழ் வாணன். ஒன்றிய கவுன்சிலர்கள் மகாலட்சுமி, ஜமுனாராணி, உமைஈஸ் வரி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் செல்வராஜ் புதுப்பட்டி, துணைத் தலைவர். ஜெய்கணேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முத்துக்குமார், ஆத்மா திட்ட தலைவர் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News