விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் எலும்பு நோய் தொடர்பான மருத்துவ முகாம்
முகாமில் 40 வயதை கடந்த ஆண்கள், பெண்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக எலும்பு பரிசோதனை செய்யப்பட்டது;
விருதுநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இலவச எலும்பு பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.
விருதுநகர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முட நீக்கியல் துறை சார்பில், இலவச எலும்பு பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி துவக்கி வைத்தார். முட நீக்கியல் துறை தலைவர் டாக்டர் மகேஸ்வரன் தலைமையில் எலும்பு உறுதி, எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து இலவச பரிசோதனைகள் செய்யப்பட்டது. இந்த முகாமில் 40 வயதை கடந்த ஆண்கள், பெண்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக எலும்பு பரிசோதனை செய்யப்பட்டது.