சிவகாசி அருகே பள்ளிக்கு சென்ற 5ம் வகுப்பு மாணவி மாயம்
Missing Cases -சிவகாசி அருகே பள்ளிக்கு சென்ற 5ம் வகுப்பு மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
Missing Cases -விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், திருவள்ளுவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் மூக்கையா (46). சிவகாசியில் உள்ள பனியன் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிளஸ்டூ மற்றும் 5ம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் திருத்தங்கல் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல இருவரும் பள்ளிக்குச் சென்ற நிலையில், பள்ளி அலுவலகத்திலிருந்து மூக்கையாவிற்கு போன் செய்து, 5ம் வகுப்பு படிக்கும் உங்களது மகள் பள்ளிக்கு வரவில்லை, ஏன் உங்கள் மகள் பள்ளிக்கு வரவில்லை என்று கேட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மூக்கையா, தனது மகளை உறவினர் வீடுகள் மற்றும் தெரிந்தவர்களின் வீடுகள் உட்பட பல இடங்களில் தேடிப்பார்த்தும், மகள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து மூக்கையா திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். வழக்குபதிவு செய்த போலீசார், காணாமல் போன பள்ளி மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2