மதுரை, சிவகாசி பகுதியில் பலத்த மழை
Madurai Sivakasi Heavy Rain சிவகாசி , மதுரை பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் இயல்வு வாழ்க்கை பாதிப்படைந்தது.;
Madurai Sivakasi Heavy Rain
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான சாரல்மழை பெய்தது. இதனை தொடர்ந்து காலை 6 மணியில் இருந்து இடைவிடாமல் தொடர்ந்து தூறல்மழை பெய்து கொண்டே இருக்கிறது. வானம் மேகமூட்டமாக இருப்பதால் தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே வானிலை ஆய்வு மையம், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர் தூறல்மழை காரணமாக, காலை நேரத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சற்று சிரமப்பட்டனர். வேலைக்குச் செல்பவர்களும் சிரமப்பட்டனர். தொடர் தூறல்மழை காரணமாக சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சிவகாசி, திருத்தங்கல், மீனம்பட்டி, பாறைப்பட்டி, அனுப்பங்குளம், சசி நகர், சித்துராஜபுரம், ரிசர்வ்லைன், சாட்சியாபுரம், விளாம்பட்டி, மாரனேரி உள்ளிட்ட பல இடங்களிலும் இன்று காலையிலிருந்து தொடர்ந்து தூறல்மழை பெய்து வருகிறது.
மதுரை மாவட்டத்திலும், பல்வே இடங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது .
மதுரை அருகே மேலூர், சோழவந்தான், வாடிப்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், சமயநல்லூர், குருவித்துறை, மேலக்கால், பரவை, விளாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
சில இடங்களில் நேற்று இரவு முதல் தூரல் மழை பெய்து வருகிறது.இதனால், மதுரை நகரில் பல்வே இடங்களில் தோண்டப்பட்ட சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மதுரை அண்ணா நகர் வீரவாஞ்சி தெரு, அன்பு மலர் தெரு, காதர் மொய்தீன் தெரு, சௌபாக்கிய விநாயகர் கோவில் தெருக்களில் சாலை சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. வீரவாஞ்சி தெருவில் தெருவில் பாதாள சாக்கடை பணிக்காக குழிகள் தோண்டப்படும் போது, குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தெருவில், குடிநீர் சாலைகளை வீணாக செல்கிறது.
இது குறித்து, மதுரை மாநகராட்சி உதவி ஆணையர், மாநகராட்சி கவுன்சிலர் கார்த்திகேயன் ஆகியோர்களிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் ,உடைபட்ட குடிநீர் குழாய்களை சீர் செய்ய ஆர்வம் காட்டவில்லை என, கூறப்படுகிறது.
இது குறித்து, மதுரை மாநகராட்சி ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.