காரியாப்பட்டிபேரூராட்சியில் ரூபாய் 16 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் :தலைவர் ஆய்வு.
Kariapatti Panchayat Work Progress விருதுநகர் மாவட்டம் காரியாபட்டிபே ரூராட்சி கரிசல்குளத்தில் 16 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகளை பேரூராட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார் .;
Kariapatti Panchayat Work Progress
விருதுநகர் மாவட்டம்,காரியாபட்டி பேரூராட்சி கரிசல்குளத்தில் சமுதாயக்கூடம் பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி 14-வது வார்டு கரிசல் குளத்தில், தெற்கு பகுதியில் உள்ள சமுதாயக் கூடம் காரியாபட்டி கரிசல்குளத்தில் 16 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள்நடைபெற்று வருகிறது.
காரியாபட்டி பேரூராட்சி கரிசல்குளத்தில், சமுதாயக்கூடம் பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி 14-வது வார்டு கரிசல் குளத்தில் தெற்கு பகுதியில் உள்ள சமுதாயக் கூடம் பல வருடங்களாக பழுதடைந்து காணப்பட்டது. பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் அயோத்தி தாஸ் குடியிருப்பு திட்டத்தில் சமுதாயக் கூடம் பராமரிப்பு பணிகளுக்காக 16 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, சமுதாய கூடம பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளை பேருராட்சி தலைவர்செந்தில், பார்வையிட்டு
ஆய்வு செய்தார் . ஆய்வின் போது, பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கரேஸ்வரன், சரஸ்வதி ஆகியோர் உடனிருந்தனர்.