சிவகாசியில் திமுக சார்பில் கண்மாய் சீரமைப்பு
Kanmai alignment on behalf of DMK in Sivakasi;
சிவகாசியில், திமுக நிர்வாகிகள் சார்பில் கண்மாய்க்கரை சீரமைப்ப மேற்கொள்ளப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ளது பெரியகுளம் கண்மாய். சிவகாசி - திருவில்லிபுத்தூர் சாலையில், மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள இந்த பெரியகுளம் கண்மாய், சுமார் 25 ஆண்டுகளுக்குப்பின் கடந்த வடகிழக்கு பருவமழையின் போது நிரம்பியது.
இந்த நிலையில் கண்மாய் கரை பகுதி மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையோரப் பகுதிகளில் முட்செடிகள் வளர்ந்து ஆக்கிரமிப்பு ஏற்பட்டது. இதனை அகற்றுவதற்கு திமுக கட்சியின் நகர வர்த்தக அணி அமைப்பாளர் இன்பம் தலைமையில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் இணைந்து சாலையோர ஆக்கிரமிப்புகள், முட்செடிகள் அகற்றப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி சிவராஜ், திமுக கட்சியின் வர்த்தக அணி நிர்வாகிகள், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.