சிவகாசியில் ஆதரவற்றோர் பள்ளியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
சிவகாசி அருகே ஆதரவற்றோர் பள்ளியில் முன்னாள் முதல்வர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது
சிவகாசி அருகே ஆதரவற்றோர் பள்ளியில் முன்னாள் முதல்வர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிவகாசி - திருவில்லிபுத்தூர் சாலையில் ஈஞ்சார் பகுதியில் உள்ள, ஜீவக்கல் ஆதரவற்றோர் பள்ளியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து தொண்டு நிறுவனத்தில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள், மாணவர்களுக்கு, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில், மேற்கு மாவட்ட மருத்துவரணி செயலாளர் டாக்டர் விஜய்ஆனந்த், திருத்தங்கல் கிழக்கு பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.