தொடர் மழையினால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பணி பெரும் பாதிப்பு

தொடர் மழையினால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பணி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-10-18 09:53 GMT

சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் பணியில் பெண்கள் (பைல் படம்).

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டது.

Sivakasi news, continuous rains,Fireworks production sufferedஇந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் முதன்மையானது தீபாவளி பண்டிகை. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற திங்கட்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளிக்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே இருக்கிறது. தீபாவளி கொண்டாட்டத்தில் முதலிடம் பிடிப்பது பட்டாசுகள் தான். வெடித்து சிதறும்,தரை மற்றும் வானில் ஜாலம் காட்டும் மத்தாப்புகளும் தான் தீபாவளி பண்டிகையின் உச்ச கொண்டாட்டமாகும். 

Sivakasi news, continuous rains,Fireworks production sufferedதமிழகத்திற்கு மட்டும் இன்றி ஒட்டுமொத்த  இந்தியாவிற்கான பட்டாசு தேவையில் பெரும்பகுதியை சிவகாசி தான் நிறைவு செய்கிறது. இதனால் தான் தொழில் நகரமான சிவகாசியை குட்டி ஜப்பான் என்கிறார்கள். சிவகாசியில் இந்த ஆண்டிற்கான பட்டாசு தயாரிப்பு பணி தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது.

Sivakasi news, continuous rains,Fireworks production sufferedசிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்துவந்த மழை காரணமாக பட்டாசு உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக விருதுநகர், சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை தாலுகா பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் பட்டாசுகள் தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு 3 நாட்கள் முன்பு வரை பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வரும். தற்போது தொடர் மழை மற்றும் வெயில் இல்லாத காரணங்களால் தொடர்ந்து பட்டாசுகளை தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால், இந்தப் பகுதிகளில் உள்ள 90 சதவிகித பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

Sivakasi news, continuous rains,Fireworks production sufferedஏற்கனவே தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வெளியூர்கள் மற்றும் பட்டாசு விற்பனை கடைகளுக்கு அனுப்பும் பணிகள் மட்டும் நடைபெற்று வருகிறது. தொடர் மழை காரணமாக சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு விற்பனை கடைகளில், வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தொடர் மழை பெய்தால் கையிருப்பில் உள்ள பட்டாசுகளை விற்பனை செய்வதில் பாதிப்பு ஏற்படும் என்று பட்டாசு வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

இதேபோல், மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், சோழவந்தான் பகுதிகளில் வெற்றிலை பறிக்கும் பணியும், மரங்களில் தேங்காய்கள் வெட்டும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை புறநகர் பகுதிகளில் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சிறிய வியாபாரிகளும் பாதிப்படைந்துள்ளனர்

Tags:    

Similar News