சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து: போர்மேன் கைது
இந்த விபத்தில் சிக்கி லட்சுமியா புரம் பகுதியைச் சேர்ந்த கணேசன், ராஜா, முத்தம்மாள் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்
சாத்தூர் அருகே, விபத்து நடந்த பட்டாசு ஆலையின் போர்மேன் கைது செய்யப்பட்டார். தலைமறைவான உரிமையாளர், மேலாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் - வெம்பக்கோட்டை அருகேயுள்ள கங்கர்செவல்பட்டி பகுதியில் உள்ள, விக்டோரியா பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி லட்சுமியாபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன், ராஜா, முத்தம்மாள் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து, ஆலை உரிமையாளர் ராஜேந்திரராஜா, மேலாளர் மற்றும் போர்மேன் சக்கையா ஆகியவர்கள் மீது, ஆலங்குளம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை, ஆலையின் போர்மேன் சக்கையாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் பட்டாசு ஆலை உரிமையாளர் மற்றும் மேலாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.