மல்லாங்கிணற்றில் பெடரல் வங்கி சார்பில் விவசாயிகளுக்கு உழவர் கடன் உதவி
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் பெடரல் வங்கி சார்பாக கடனுதவி வழங்கல்;
மல்லாங்கிணறு சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் பெடரல் வங்கி சார்பாக நடைபெற்ற விவசாயிகள் உழவர் கடன் வழங்கும் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மல்லாங்கிணறு சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் பெடரல் வங்கி சார்பாக விவசாயிகள் உழவர் கடன் வழங்கும் நிகழ்ச்சி மல்லாங்கிணறு சீட்ஸ் நிறுவனத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு,சீட்ஸ் நிறுவன திட்ட இயக்குனர் பாண்டியன் தலைமை வகித்தார். நபார்டு வங்கி துணை பொதுமேலாளர் ராஜசுரேஷ்வரன் முன்னிலை வகித்தார். சீட்ஸ் நிறுவன செயல் அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில், 19 விவசாயிகளுக்கு 15 லட்சம் கடன் உதவிகளை பெடரல் வங்கி மண்டல மேலாளர் வருண் பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். தமிழகத்தில் முதன்முறையாக விண்ணப்பம் கொடுத்த 10 வது நிமிடத்தில் விவசாயிகள் கணக்கில் கடன்தொகை வரவு வைக்கும் புதிய தொழில்நுட்ப திட்டத்தை செயல்படுத்த பெடரல் வங்கிக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 10 நிமிடத்தில் அந்த அந்த விவசாயிகள் கணக்கில் கடன்தொகை வரவு வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், முன்னோடி வங்கி மேலாளர் பாண்டி செல்லம், உதவி வேளாண்மை இயக்குனர் ராமச்சந்திரன்,உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜன், பெடரல் வங்கி கிளை அலுவலர்கள் ஜான். ஜோசப்,வினோத்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.