சிவகாசியில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி: மேயர் பரிசு வழங்கல்
Volly Ball - சிவகாசியில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு மேயர் பரிசு, கோப்பை வழங்கினார்.;
சிவகாசியில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற ராஜபாளையம் அணிக்கு, மேயர் பரிசு கோப்பை வழங்கினார்.
Volly Ball -விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. 2ம் ஆண்டு நடைபெறும் இந்தப் போட்டியில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
நாக்அவுட் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில், இறுதி போட்டியில் ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் பரிசுக் கோப்பையை வழங்கினார்.
திருவில்லிபுத்தூர் ஜி.எஸ்.இந்து மேல்நிலைப்பள்ளி அணி 2வது இடத்தையும், திருவில்லிபுத்தூர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 3வது இடத்தையும், வத்திராயிருப்பு நாடார் மேல்நிலைப்பள்ளி 4வது இடத்தையும், சிவகாசி முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி அணி 5வது இடத்தையும் வென்றன.
நிகழ்ச்சியில் துணை மேயர் விக்னேஷ்பிரியா, பள்ளி தாளாளர் முகைதீன் அப்துல்காதர், தலைமை ஆசிரியர் திருப்பதி, மாநகராட்சி கவுன்சிலர்கள் ராஜேஷ், வெயில்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை சிவகாசி முஸ்லீம் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2