சிவகாசி அருகே உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்து பசுமாடுகள் உயிரிழப்பு
சிவகாசி அருகே உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து 2 பசு மாடுகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ரிசர்வ்லைன், திருப்பதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகணேசன் (55). இவர் அந்த பகுதியில் மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் பொழுது, அந்தப் பகுதியில் உள்ள கண்மாய் பகுதியின் வழியாக செல்லும், உயர் அழுத்த மின் கம்பி திடீரென்று அறுந்து விழுந்தது.
இதில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்து, 2 பசு மாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. உயிரிழந்த பசு மாடுகள் சேற்றுப்பகுதியில் சிக்கியிருந்ததால், சிவகணேசனால் மாடுகளை மீட்க முடியவில்லை. இது குறித்து சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாடுகளின் சடலங்களை மீட்டனர். சம்பவம் குறித்து மின்வாரிய அதிகாரிகள், நகர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. மதுரை அருகேயுள்ள வாடிப்பட்டி, சோழவந்தான், தென்கரை, கருப்பட்டி, கரட்டுப்பட்டி, நிலக்கோட்டை, பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பகலில் வெப்பம் அதிகம் காணப்பட்டது.
கோடை வெய்யில் தாக்கம் காரணமாக, ஆங்காங்கே பல இடங்களில், இளநீர், கூழ், நுங்கு விற்பனையானது அதிகரித்துள்ளது. இளநீரானது, ரூ. 50, 60 விற்கப்படுகிறது. கோடை வெய்யில் ஐ சமாளிக்க நகர் மக்கள் குளிர்பானங்களை விரும்பி அருந்துகின்றனர்.