விருதுநகரில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பரிதாப உயிரிழப்பு

Electric Shock Death - விருதுநகரில் மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பரிதாப உயிரிந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-07-06 08:43 GMT

உயிரிழந்த ஒப்பந்த ஊழியர்.

Electric Shock Death -விருதுநகர் மாவட்டத்தில் மின் பாதைகளில் உள்ள பீங்கான் இன்சுலேட்டர்களை மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக ரப்பர் இன்சுலேட்டர்கள் மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில், 20 ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது, அந்தப் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டு, மின்சாரம் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று விருதுநகர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பாலம்மாள் நகர் பகுதியில், இன்சுலேட்டர் மாற்றும் பணியில் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள சித்தாளம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த வெயில்செல்வன் (36), வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் (26) இருவரும் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மின் கம்பியை இன்சுலேட்டரில் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த வெயில்செல்வன் திடீரென்று மின்சாரம் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த மின் கம்பத்தில் இருந்த முத்துராஜ், பதற்றத்தில் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் முத்துராஜை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த வெயில்செல்வன் உடலை மீட்டு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் மின்வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News