சிவகாசியில் 10 ஆண்டுக்கு பின் தார்ச்சாலை அமைக்கும் பணி: மேயர் ஆய்வு

சிவகாசியில் 10 ஆண்டுக்கு பின் நடைபெறும் தார்ச்சாலை பணிகளை மேயர் ஆய்வு செய்தார்.

Update: 2023-08-01 14:12 GMT

சிவகாசியில், தார்ச் சாலை அமைக்கும் பணியை மேயர் சங்கீதா ஆய்வு செய்தார்.

சிவகாசியில் 10 ஆண்டுகளுக்கு பின் அமைக்கப்பட்ட தார்ச்சாலை பணிகளை மாநகராட்சி மேயர் சங்கீதா ஆய்வு செய்தார்.

இந்தியாவின் குட்டி ஜப்பான் என அழைக்கப்படுவது விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆகும். இதற்கு காரணம் அங்குள்ள பட்டாசு தொழிற்சாலைகள் தான்.  இத்தகயை சிறப்புக்குரிய சிவகாசி மாநகராட்சியின் பல பகுதிகளில், நீண்ட ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. ஸ்ரீமாரியம்மன் கோவில் எதிரே உள்ள பி.கே.எஸ்.ஆறுமுகச்சாமி நாடார் சாலையில் அச்சகங்கள், சிறு தொழில் நிறுவனங்கள், லாரி செட்கள், குடோன்கள் அதிகமாக உள்ளன.

மேலும் பழைய விருதுநகர் சாலையில் இருந்து, ஸ்ரீமாரியம்மன் கோவில் எதிரேயுள்ள சாலை வழியாக காமராஜர் பூங்கா, தேவமார் தெரு மற்றும் திருத்தங்கல் பகுதிகளுக்கு செல்லும் சாலையாகவும் இந்த சாலை இருந்து வருகிறது. நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் கனரக வாகனங்கள் என தினமும், ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாலை குண்டும், குழியுமாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை சீரமைக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த  கோரி்க்கையின் பேரில் இந்தப் பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் சாலை அமைக்கும் பணிகளை, மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் சென்று இருந்தனர்.

Tags:    

Similar News