தமிழகத்தில் மாற்றம் வரும்: இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் பேச்சு

தமிழகத்தில் விரைவில் மாற்றம் வரும் என இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத்;

Update: 2022-07-27 10:45 GMT

இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன்சம்பத்

முன்னாள் முதல்வராக இருந்த குமாரசாமி ராஜா திருஉருவ சிலைக்கு இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன சம்பத் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பாரத பிரதமர் அறிவித்துள்ள இல்லம்தோறும் தேசியக்கொடி உள்ளம் தோறும் தேச பக்தி .திராவிடம் அல்ல ஒன்றியம் அல்ல உள்ளந்தோறும் தேசபக்தி என்று கூறி முழக்கமிட்டனர்.

 பின்னர் நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பில்: மேலும் அவர் கூறியதாவது: குமாரசாமி ராஜா பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். மேலும், பள்ளி ,கல்லூரி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செயல்படவில்லை உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக செயல்படுகிறார். ஆசிரியர்களை மிரட்டு நோக்கத்துடன் செயல் படுபவதை கைவிட வேண்டும்.

இந்துக்கள் நடத்தும் பள்ளிகளில் தவறு நடந்தால் சூறையாடப்படுகின்றது. அதை கிறிஸ்தவர்கள் நடந்தும் பள்ளிகளில் தவறு நடந்தால் யாரும் கண்டு கொள்வதில்லை. தற்போது, அமைச்சர் பொன்முடி நடத்தும் கல்லூரியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.இதற்க்கு அமைச்சர் பொறுப்பேற்பாரா. 

சபாநாயகர் அப்பாவு அனைத்து மதத்தினருக்கும் அனைத்து சமுதாயத்தில் இருக்கும் பொதுவானவர் இவர் கிறிஸ்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மற்ற மதத்தினரை படிப்பறிவு இல்லாதவர்கள் என கூறுவது நல்லதல்ல. சபாநாயகர் அப்பாவு மதமாறி இருக்கலாம். அதற்காக, மற்ற மதத்தினரை தவறாக பேசக்கூடாது. பொதுவானராக இருக்க வேண்டும் .நீங்கள் இதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால், சபாநாயகர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கருப்புக்கொடி காட்டுவோம் . தமிழக முதல்வரும் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து கூறுவதில்லை. அவையால்தான் இந்த அரசை இந்து விரோத அரசை என நாங்கள் கூறுகிறோம்.

தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சிகள் இந்து அமைப்புகள் நடத்துகின்ற நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுப்பது தடை விதிப்பது நல்லதல்ல. எங்களுடைய கருத்துரிமை பேச்சுரிமை பறிக்கக் கூடாது எங்கள் மீது தடைகள் விற்பதை ஜனநாயக முறைப்படி எதிர்கொள்வோம் எங்களுடைய தேசியக் கொள்கை எடுத்துச் சொல்வோம்.தமிழகத்தில் வெகு சீக்கிரத்தில் மாற்றங்கள் வரும் என்றார் அர்ஜுன் சம்பத்.

Tags:    

Similar News