திமுக அரசின் வாக்குறுதிகள் என்னவாயிற்று முன்னாள் அமைச்சர் கேள்வி

Admk Public Meeting விருதுநகரில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி கலந்துகொண்டு பேசினார்.;

Update: 2024-01-28 09:31 GMT

விருதுநகர் அருகே நடந்த அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி பேசினார். 

Admk Public Meeting 

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழகம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில், கழக நிறுவனத் தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாளையொ், ஜவகர் மைதானத்தில் வைத்து மாபெரும் பொதுக்கூட்டம், மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அழகாபுரியான் தலைமையில், சிறப்புரை பேச்சாளர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி. மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பாபுராஜ்,மாவட்ட அம்மா பேரவைச்செயலாளர் கிருஷ்ணராஜ். நகர செயலாளர்கள் துரை முருகேசன், பரமசிவம்,ஒன்றியச் செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம்,மாவட்ட கழக இணைச்செயலாளர் அழகு ராணி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் ஜான்சன், மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜ்குமார்மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி பேசுகையில்:

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதை போல் திமுக அரசு ஏமாற்றி விட்டது.

அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கி வந்த பல்வேறு திட்டங்களை நிறுத்தியதுடன், மகளிர்க்கு ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கி மறுபுறம் சொத்துவரி, மின்சார கட்டணத்தை உயர்த்தியதோடு வங்கி கடன் வாங்கி ஒவ்வொரு நபரின் தலையிலும் ரூபாய் 3.50 லட்சம் கடன் சுமை ஏற்றி வைத்து விட்டனர். வங்கி கடன் வாங்கி அவர்களது குடும்பத்திற்கு மட்டுமே நல்லது செய்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின் என்றார்.

Tags:    

Similar News