சிவகாசி முருகன் ஆலயத்தில் ஆடிக்கார்த்திகை விழா
Local Temple- ஆடி கார்த்திகை தினத்தை முன்னிட்டு அதிகாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது
Local Temple- சிவகாசி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், சுப்பிரமணியர் சந்நிதி என்ற முருகன் கோவிலில் இன்று ஆடி கார்த்திகை தினத்தை முன்னிட்டு அதிகாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆடி கார்த்திகையை முன்னிட்டு சிவகாசியின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். மேலும் விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆடி கார்த்திகை தினத்தில் முருகப்பெருமானை வேண்டி, ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.மாலையில் சுவாமி தரிசனம் செய்து விரதத்தை நிறைவு செய்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2