விருதுநகர் மாவட்டத்தில் 6 லட்சம் பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில், ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் வாக்காளர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்;

Update: 2022-08-28 16:00 GMT

ஆதார் எண் இணைப்பதற்காக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி 

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில், 6 லட்சம் பேரின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில், ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் வாக்காளர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி பேசும்போது, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதற்காக பல்வேறு வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வாக்காளர்கள் https://www.nvsp.in/ என்ற இணையதளம் மூலமாகவோ, வாக்காளர் உதவி செயலி மூலமாகவோ தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைத்து கொள்ளலாம். மேலும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் அந்தந்தப்பகுதி வீடுகளுக்குச் சென்று படிவம் 6பி மூலமாகவும் ஆதார் எண்ணை சேர்த்து வருகின்றனர். வாக்காளர்கள் தங்களது பகுதியில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலரின் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலரின் அலுவலகம், வாக்காளர் உதவி மையம் மற்றும் இ-சேவை மையங்கள் மூலமாகவும் தங்களது ஆதார் எண்ணை, வாக்காளர் பட்டியலில் இணைக்கலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 16 லட்சத்து, 26 ஆயிரத்து, 638 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் இது வரை 6 லட்சத்து, 6 ஆயிரத்து, 375 வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.

Tags:    

Similar News