ராஜபாளையத்தில் வீடு புகுந்து நகை திருடியவர் கைது - நகை மீட்பு
ராஜபாளையத்தில் வீடு புகுந்து நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்; அவரிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது.;
ராஜபாளையம் அம்பலபுளி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கனி (52 ). இவர், அதே பகுதியில் தனது தாயார் சுப்புலட்சுமி வீட்டில் குடியிருந்து வருகிறார். முத்துக்கனி அவரது மகனுடன் வசித்து வருகிறார். இவர், கப்ப கிழங்கு மாவு விற்பனை செய்து வருகிறார். வீட்டில் மேசையில் இரண்டரை பவுன் நகையை வைத்து விட்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது, அப்போது திடீரென நகை காணாமல் போயுள்ளது.
முத்துக்கனி, வீடு முழுவதும் தேடியும் நகை கிடைக்காத நிலையில், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்த புகார் அளித்தார். அதன் பேரில், குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, அதே பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் பாண்டியனை கைது செய்தனர். அவரிடம் இருந்து இரண்டரை பவுன் நகையை மீட்டு பாண்டியனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.