காரியாபட்டி அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோர மரம் நடும் திட்டம்..!

காரியாபட்டியில், நெடுஞ்சாலைதுறை சார்பில், மரம் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Update: 2024-08-23 10:33 GMT

காரியாபட்டி அருகே, சாலை ஓரம் மரம் நடும் திட்டம்.

காரியாபட்டியில், நெடுஞ்சாலைதுறை சார்பில், மரம் வளர்ப்புத்  திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

காரியாபட்டி:

விருதுநகர்,காரியாபட்டி பகுதியில், நெடுஞ்சாலை துறையின் சார்பில், மரக்கன்றுகள் பராமரிப்பு செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டம், நெடுஞ்சாலை துறையின் சார்பில்,சாலை ஓரங்களில் அரசின் பசுமை திட்டம் மூலமாக நிழல் தரும் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது.

முதற்கட்டமாக , காரியாபட்டி யிலிருந்து - திருச்சுழி செல்லும் மாநில சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளது. அருப்புக் கோட்டை நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் மேற்பார்வையில், தினமும சாலை பணியாளர்கள் மரக்கன்று களை பராமரித்து வருகிறார்கள். இந்த ஆண்டு மாநில சாலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட மரங்கள் நட்டு வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாலை  ஓரங்களில் நடப்பட்டிருந்த லட்சக்கணக்கான மரங்கள் சாலை விரிவாக்கங்களுக்காக வெட்டப்பட்டுவிட்டது. மரங்கள் வெட்டப்பட்டுவிட்டனவே தவிர மீண்டும் வெட்டப்பட்ட மரங்களை நடவில்லை. இதனால் இயற்கை சமநிலை பாதிக்கப்பட்டு பல்வேறு இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. 

மரங்கள் மட்டுமே மழையை அறுவடை செய்யமுடியும். மரங்கள்தான் மேகத்தை சேர்த்து மழை பெய்யவைக்கும். மரங்களின்றி மழை பெய்யாது. அதனால் மழை பெய்யவேண்டுமானால், மரங்களை நடவேண்டும். 

Tags:    

Similar News