விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் ஆடித்தபசு விழா: பக்தர்கள் பரவசம்..!

திருச்சுழியில் உள்ள திரு மேனிநாதர் சாமி கோயில் ஆடித்தபசு விழா ஜூலை 12ல், கொடியேற்றத்துடன் துவங்கியது.

Update: 2024-07-23 09:33 GMT

திருச்சுழியில் நடந்த ஆடித்தபசு திருவிழா 

திருச்சுழி குண்டாற்றில் ஆடித்தபசு விழா:

திருச்சுழி, ஜூலை 23.

திருச்சுழி குண்டாற்றில் ஆடித்தபசு விழா நேற்று மாலை நடந்தது. திருச்சுழியில் உள்ள திரு மேனிநாதர் சாமி கோயில் ஆடித்தபசு விழா ஜூலை 12ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் சுவாமி, அம்பாள் பக்தர்க ளுக்கு சிம்மம், குதிரை, அன்னம், வெள்ளி, ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

10 ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை திருச்சுழி குண்டாற் றில் தபசு விழா நடந்தது.துணை மாலையம்மன் தபசு மண்டபத்தில் திரு மேனிநாதரை, அடைவதற்காக தவம் மேற்கொண்ட தாகவும், அவர் தவத்தை கண்டு மகிழ்ந்து திருமேனிநாதர் ரிஷப வாகனத்தில் அம்மனுக்கு காட்சி தந்து அம்மனை சாந்தம் செய்த தாகவும் கூறப்படுகிறது. பின்னர், திருமேனிநாதருக்கும், துணைமாலை அம்ம னுக்கும், மாலை மாற்றும் நிகழ்ச்சி திருச்சுழி குண்டாற்றில் நடந்தது.

அம்மன் சாமியை, 3 முறை வலம் வந்த பின் தீபாரா தனை காட்டப்பட்டது. விழாவில் வைத்தியலிங்க நாடார் பள்ளி என்.எஸ். எஸ் .மாணவர்கள். சுவாமி ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட னர்.

Tags:    

Similar News