காரியாபட்டியில் உலக சுற்றுச்சூழல் தினம்

பாரத ஸ்டேட் வங்கி- தானம் பவுண்டேசன் கிராம சேவா திட்டம் சார்பாக சூரனூர் கிராமத்தில் மரக்கன்று நடப்பட்டது

Update: 2023-06-08 10:30 GMT

காரியாபட்டியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி  மரக்கன்று நடப்பட்டது

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பாரத ஸ்டேட் வங்கி- தானம் பவுண்டேசன் கிராம சேவா திட்டத்தின் சார்பாக காரியாபட்டி அருகே சூரனூர் கிராமத்தில், உலக சுற்றுச்சூழல் தினம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில்,தானம் பவுண்டேசன் அணித்தலைவர் பிரகலாதன், திட்ட நிர்வாகி சதீஸ் பாண்டியன், மதுரை தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஹரிபாபு ஆகியோர் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம் குறித்தும், நீர் பாதுகாப்பில் நீர் நிலைகளின் பங்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நமது சமுதாயத்தின் பங்கு" என்ற தலைப்புக்களில் கருத்துரையாற்றினார்கள். விழாவில், சுற்றுச்சூழல் விழிப்புனர்வு பற்றி மாணவர்கள் சார்பாக ஓவியப்போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிவில், மரக்கன்றுகள் நட்டுவைக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை,பாரத ஸ்டேட் வங்கி-தானம் அறக்கட்டளை செய்திருந்தது.

பாரத ஸ்டேட் வங்கியின் மூலமாக இளம் தொழில் முனைவோர்கள் ஊக்குவித்தல், அரசின் கடன் உதவி திட்டங்கள் மற்றும் குழு சார்ந்த கடன் திட்டங்கள் மட்டுமின்றி சிறு, குறு கடன் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை பொது மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாகவும், இளம் தொழில் முனைவோர்களை உருவாக்கி, வேலை வாய்ப்பினை உருவாக்கிடவும் தமிழகத்திலேயே முதன்முறையாக பெரம்பலூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் ‘நான் உங்களுக்கு உதவலாமா’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு, அவர், இது போன்ற நோக்கங்களுடன் வங்கிகிளைகளுக்கு வருபவர்களுக்கு உதவி செய்வதோடு, அவர்கள் வளர்ச்சியடைய தேவையான சேவைகளை செய்வார்.

Tags:    

Similar News