காரியாபட்டியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி...!

காரியாபட்டியில் நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் ஏராளமான அணிகள் பங்கேற்றன.

Update: 2024-07-09 10:52 GMT

கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்பட்டது.

காரியாபட்டியில் நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் ஏராளமான அணிகள் பங்கேற்றன. 

காரியாபட்டி :

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பாண்டியன் நகர் இளைஞர் அணி சார்பில், மாவட்ட அளவிலான கபடி போட்டி நடை பெற்றது. அ.ம.மு.க மாணவர் அணி செயலாளர் கவிதா நாச்சியார் போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியில், மாவட்ட அளவில் 70க்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்றன . இறுதி போட்டியில், வெற்றி பெற்ற அணிகளுக்கு பா.ஜ.க

மாவட்ட செயலாளர் ஆறுமுகம் , அழகிரி பாசறை மாவட்ட பொறுப்பாளர் கருப்பு, தாமோதரக் கண்ணன், பா.ஜ.க நிர்வாகிகள் பாலமுருகன், ராமலிங்கம் மணிகண்டன், தாமோதரக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கபடி போட்டி ஒரு காலத்தில் தமிழகத்தில் மட்டும் விளையாடும் விளையாட்டாக இருந்தது. ஆனால் தற்போது சர்வதேச அளவில் கபாடி போட்டிகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் வேலைவாய்ப்பில் மற்ற துறைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம் போலவே தற்போது கபடி விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 

அதனால் தமிழகம் முழுவதும் கிராமங்களில் கூட கபடி போட்டிகள் நடந்து வருகின்றன. இப்படியான போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு பின்னர் மாநில அளவிலும் தேசிய அளவிலும் தேர்வு செய்யப்படுகின்றனர். அதனால் விளையாட்டில் ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு எதிர்காலம் சிறப்பாக உள்ளது. 

Tags:    

Similar News