மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி தொடக்கம்
விருதுநகர் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நோபல் மெட்ரிக் பள்ளியில் இரு நாட்கள் நடைபெற்றது;
விருதுநகர் மாவட்ட அளவிலான, அறிவியல் கண்காட்சி நோபல் மெட்ரிக் பள்ளியில் இரு நாட்கள் நடைபெற்றன.
காரியாபட்டியில் உணவு, இயற்கை வளம், நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள், இயற்கை மேலாண்மை போன்ற ஏழு தலைப்புகளில் போட்டி நடைபெற்றன.அரசு மேல்நிலைப்பள்ளி மல்லாங்கிணறு மாணவர்கள், சீனி செல்வம் மற்றும் மருது ஆகியோர் எரிபொருள் சிக்கனம் என்ற தலைப்பில் உருவாக்கிய மாடல் கண்காட்சியின் முதல் பரிசினைப் பெற்றது. அவர்களுக்கு ,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞான கௌரி, சிறப்பு பரிசாக நீட் தேர்விற்கான பயிற்சி புத்தகங்களை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில், நோபல் கல்லூரி தாளாளர் மற்றும் நோபல் பள்ளியின் இயக்குனர் ஜெரால்ட் ஞான ரத்தினம் கலந்து கொண்டார்.